கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் உலக செவிலியர் தினம்:உறுதிமொழி ஏற்பு

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், போரில் காயம்பட்ட வீரர்களுக்கு நேரம் பார்க்காமல் செவிலியப்பணி செய்து வந்தார். உலகின் முதலாவது செவிலியர் பயிற்சிப் பள்ளியையும் நிறுவி,

News image
Updated On :12 மே 2014, 11:21 am

முத்துகுமார்

உலக செவிலியர் தினத்தையொட்டி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், போரில் காயம்பட்ட வீரர்களுக்கு நேரம் பார்க்காமல் செவிலியப்பணி செய்து வந்தார். உலகின் முதலாவது செவிலியர் பயிற்சிப் பள்ளியையும் நிறுவி, செவிலியர்கள் அதிகளவில் உருவாக காரணமாக இருந்தார். அவரது பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக செவிலியர் அமைப்பின் கீழ் 1965-ம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மருத்துவர் எஸ்.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் எஸ்.சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் ஈ.மதுமதி,  செவிலியர் ஆர்.பானு ஆகியோர் வரவேற்றனர். மருத்துவர் எஸ்.பாக்கியம்பார்வதி பங்கேற்று பேசினார். நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு பலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழியையும் செவிலியர்கள் ஏற்றனர். செவிலியர் வி.ராதா நன்றி கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் வைரமுத்துராஜா, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமதுஷாபி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நைட்டிங்கேல் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில்  25 ஆண்டுகள் பணிமுடித்த 19 செவிலியர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத் தலைவர். பி.அந்தோனி, செயலர் டி.ஜெயலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) டி.மங்களம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.