ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் வீதிகளில் கருப்புக் கொடி கட்டியும், கொம்புகளில் கருப்புத் துணி சுற்றி ஊர்வலம் வந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒனறியத்தில் உள்ளது பாகனேரி. இங்கு பலர் ஜல்லிக்கட்டுக்கான காளைகளை வளர்த்து வருகின்றனர். உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரி பாகனேரியில் செவ்வாய்க்கிழமை வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கிராம வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் கருப்புத் துணியைச் சுற்றி அவற்றை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து பேரவையின் மாநில துணைத் தலைவர் செந்தாமரை உடையப்பன் கூறியதாவது:
தமிழர்களின் கலாச்சார விளையாட்டாக இருந்து வருவது ஜல்லிக்கட்டு. இதில் இளைஞர்களின் வலிமையக் காட்டும் வகையில் காளைகளை அடக்குவது என்பது தமிழ் மரபு. இதுவரை நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு ஏற்ற வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொன்மையான விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


