ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் வாக்கு எண்ணும் மைய நுண்ணிய பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி பாளையங்கோட்டை

News image
Updated On :13 மே 2014, 8:55 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் நுண்ணிய தேர்தல் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்தும், தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணி குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்தும் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் நுண்ணிய தேர்தல் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வாக்கு எண்ணும் மேஜைக்கும் ஒரு நுண்ணிய பார்வையாளர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒரு நுண்ணிய தேர்தல் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

நுண்ணிய பார்வையாளர்களாக வங்கி, மத்திய அரசு பணியாளர்கள், வருமானவரித் துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நுண்ணிய பார்வையாளர்கள் ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையினை கண்காணித்து குறிப்புகள் எடுத்து, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பொது தேர்தல் பார்வையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நுண்ணிய பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட தேர்தல் ஆணைய அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 6.30 மணிக்குள் நுண்ணிய பார்வையாளர்கள் மையத்திற்கு வந்து அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜையில் அமர வேண்டும்.

நுண்ணிய பார்வையாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து விபரங்களை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படும் வாகனங்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றார் அவர். பயிற்சியில் தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பி. உமாமகேஷ்வரி,உதவி தேர்தல் அலுவலரும் சேரன்மகாதேவி சார் ஆட்சியருமான ரோஹ்னிராம்தாஸ்,உதவி தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான அர. லெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் எஸ். பால்துரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.