/

தனி கலந்தாய்வு: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு வரவேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வின்றி, தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையிலும், பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலும்

News image
Updated On :14 மே 2014, 2:37 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வின்றி, தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையிலும், பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலும் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை செய்திட பல்கலை நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகளை வரவேற்கிறோம் என அண்ணனாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013 கல்வி ஆண்டில்  மருத்துவம், பொறியியல், வேளாண்மை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அதன் பின்னர் அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசு இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும் கலந்தாய்வு வைத்து அனுமதி சேர்க்கை நடத்தப்பட்டது. இதனால் ஏழை. எளிய மாணவர்கள் ஏராளமானோர் பயனடைந்தனர்.

இந்த கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு தனி கலந்தாய்வு மூலம் அனுமதி சேர்க்கை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மேலும் இந்த ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே கலந்தாய்விற்கு அழைக்கப்படவுள்ளனர். மேலும் தர வரிசையின் படி ரேண்டம் நம்பர் அளித்து தனி கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. எவ்வித நன்கொடை, மறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டு நடவடிக்கைக்குழு வரவேற்கிறது.

மாணவர்களின் நலனுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் சுயநிதியில் செயல்படும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை தமிழகஅரசே ஏற்றுக்கொண்டு அதற்கான நிதியுதவிகளை வழங்கி முழுமையாக செயல்படுத்தும் போது கட்டணங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தற்போது பல்கலைக்கழகம் பல்வேறு நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது மாணவர்களுக்கான கட்டணங்களை குறைத்தால் இதுபோன்ற சுயநிதியில் செயல்படும் மருத்துவம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை நடத்த முடியாத சூழல்தான் ஏற்படும். எனவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம் என அறிக்கையில் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.