கல்லூரி மாணவியை திருமணம் செய்ய வலியுறுத்தி கலாட்டா செய்த வாலிபர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்ய வலியுறுத்தி கலாட்டா செய்த வாலிபரை படாளம்


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை திருமணம் செய்ய வலியுறுத்தி கலாட்டா செய்த வாலிபரை படாளம் போலீசார் வியாழன்கிழமை கைது செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த கோழியாளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மகள் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் மகன் கோகுலகண்ணன் (வயது 24). வேலை எதுவும் செய்யாமல் ஊரைச்சுற்று வந்தார்.
கல்லூரிக்கு செல்ல மல்லிகா பஸ் ஸ்டேண்டுக்கு வரும்போது அவரை கோகுல்கண்ணன் தான் உன்னை காதலிப்பதாகவும், உன்னை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறிவந்தான். இதனை மல்லிகா விரும்பாததால், கோபமாக திட்டியுள்ளார். அதன்பின் பலமுறை கோகுலகண்ணன் மல்லிகாவை கிண்டல் செய்து கலாட்டா செய்து வந்தார். இதனை தன்பெற்றோர்களிடம் சொல்லி மல்லிகா அழுதுள்ளார். இதனை படாளம் போலீசில் மல்லிகாவின் தந்தை தனசேகரன் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் கல்லூரி மாணவியை கலாட்டா செய்த வாலிபர் கோகுலகண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...