சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் கோயிலில் பால் அபிஷேகம்: அதிமுகவினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

அதிமுக அமோக வெற்றி பெற்றதால் சிதம்பரம் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் 108 குட பால்அபிஷேகம் செய்தும், 108 தேங்காய் உடைத்தும் அதிமுகவினர் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Updated On :17 மே 2014, 8:48 am

அதிமுக அமோக வெற்றி பெற்றதால் சிதம்பரம் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் 108 குட பால்அபிஷேகம் செய்தும், 108 தேங்காய் உடைத்தும் அதிமுகவினர் நேர்த்தி கடன் செலுத்தினர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், தமிழகத்தில் 37 இடங்களிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து சிதம்பரம் கீழவீதியில் உள்ள ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் தொகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.அருள் தலைமையில் வீரசக்தி ஆஞ்சநேயருக்கு 108 பால் குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் 108 தேங்காய் உடைத்து தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள் நேர்த்திகடன் செலுத்தினார். பின்னர் வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கி அதிமுகவினர் வெற்றியை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நிர்வாகிகள் சிவசிங்காரவேல், மணிவேல், பாலதண்டாயுதம், ராஜா, ராஜவேல், ரமேஷ், இளங்கோ, தனகோவிந்தராஜன், பழனிவேல், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.