தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்: 3 பேர் புதிதாக சேர்ப்பு

தமிழக அமைச்சரவையிலிருந்து ரமணா, பச்சைமால், தாமோதரன் உள்ளிட்ட மூவர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

News image
Updated On :19 மே 2014, 2:02 pm

வேல்முருகன்

தமிழக அமைச்சரவையிலிருந்து ரமணா, பச்சைமால், தாமோதரன் உள்ளிட்ட மூவர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த முனுசாமிக்கு தொழிலாளர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலத்துறையை கவனித்த ஆர்.பி., உதயகுமாருக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறித்துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜூக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.