காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

இடவிற்பனை செய்வதாகக் கூறி பணம் மோசடி: ஒருவர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த சக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (59). இவர் கடந்த 2011ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தி ஆவாரங்காட்டைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் மனைவி காளிமுத்து

Updated On :20 மே 2014, 11:03 am

இடம் விற்பனை செய்வதாகக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த சக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (59). இவர் கடந்த 2011ஆம் ஆண்டு திருப்பாச்சேத்தி ஆவாரங்காட்டைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் மனைவி காளிமுத்து(35) என்பவரிடம் திருப்புவனம் புதூரில் 1,331 சதுரடி இடத்தை விலைக்குத் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சத்தை முன் பணமாகப் பெற்றாராம்.

பின்னர் நீண்டகாலமாக அந்த இடத்தை காளிமுத்துக்கு பத்திரப் பதிவு செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மனோகரன் விற்பனைக்காக காட்டிய இடம் வேறொரு நபருடையது என்று காளிமுத்துவுக்கு தெரிய வந்ததாம். இதைத் தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டாராம். ஆனால் மனோகரன் பணத்தைத் திரும்பத் தரவில்லையாம். இது குறித்து காளிமுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் முகுந்த் கோட்னீஸிடம் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி விசாரணை நடத்தி மனோகரனைக் கைது செய்து செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.