தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதிய அதிவேக அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது

மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 மே 2014, 11:35 am

வேல்முருகன்

மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைபேசியுடன் கூடிய சேவையில், அன்லிமிடெட் வசதியுடன், அகன்ற அலைவரிசை சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகமும், அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மாத வாடகையை ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கு மொத்தமாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.

. மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு. தொலைபேசி இணைப்பு ஏற்கனவே வைத்திருப்பவர்கள் மாதம் ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட் சேவையை பெறலாம். பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.