தமிழக அளவில் 10-ம் வகுப்பு தேர்வில் மூக்குப்பொடி வியாபாரியின் மகள் ஆர். ஸ்ரீரத்தினமணி முதலிடம் பெற்றுள்ளார். அதோடு சிறந்த விஞ்ஞானியாகி நாட்டுக்கு சேவை செய்வதே லட்சியம் எனவும் தெரிவித்தார்.
விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத் தெருவைச் சேர்ந்த ஆர்.ராம்தாஸ்-நாகராணி தம்பதியரின் மகள் ஸ்ரீரத்தினமணி(17). இவரது தந்தை வெயிலுகந்தம்மன் வீதியில் மூக்கு பொடி வியாபாரம் செய்து வருகிறார். அதேபோல், தாயார் அரசு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவியாவர். இந்நிலையில் இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-100, கணக்கு-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மாணவி ஸ்ரீரத்தினமணி கூறியதாவது: ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றைய நாளிலேயே படித்து விடுவேன். பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் கூச்சப்படாமல் கேட்டு அறிந்து கொள்வேன். அதனால் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவியாக இருந்து வருகிறேன். அதேபோல், ஒவ்வொரு திருப்புதல் தேர்வுகளையும் பொதுத்தேர்வாக நினைத்து எழுதுவேன். அதனால் பொதுத்தேர்வை என்னால் எளிதாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளேன். நான் விஞ்ஞானியாகி நாட்டுக்கு சேவை செய்வதே என் லட்சியமாகும் என மாணவி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

