சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரத்தில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா!

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

Updated On :23 மே 2014, 12:20 pm

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீகுருநமச்சிவாயர் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

வேங்கான்தெருவில் திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஆத்மநாதர் கோயிலை மாணிக்கவாசகர் கட்டி அங்கேயே தங்கியிருந்து வழிபட்டு வந்துள்ளார். அவருக்கு முன்பு பர்ணசாலை அமைத்து பதஞ்சலி, வியாக்கிரபாதர், குருநமச்சிவாயர் போன்ற முனிவர்கள் தங்கியிருந்து தவம் செய்த இடமாகும். குருநமச்சிவாயரின் பசியை போக்க அம்பிகை உணவு தந்த அருளிய இடம். குருநமச்சிவாயர் தவமிருந்து சமாதியான இடத்தில், அவருக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.  அதுபோன்று இங்குள்ள ஆத்மநாதர் கோயிலில் தங்யிருந்த சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவாசகத்தை சொல்ல அந்தணர் வடிவில் வந்த ஸ்ரீநடராஜப் பெருமான் எழுதி, இறுதியில் திருச்சிற்றம்பலமுடையான் என கையொப்பிட்டதாக வரலாறு கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.