இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதியதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் எனவும் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்பே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்பாக்கியமான செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. ராஜபட்ச வருகையை எதிர்த்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி பறக்கும் என்று கூறினர்.