கோடைக் காலத்தில் மே மாதத்தில் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக 183.31 மிமீ மழை பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 3 புயல்கள் உருவான போதும் சிவகங்கை மாவட்டத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கந்தகபூமியான சிவகங்கையில் தொடர்ச்சியாக கடும் வறட்சி நிலவியதால் விவசாயிகள் வானம்பார்த்த பூமியாகவே விவசாயத்தை மேற்கொண்டனர். மழையை எதிர்பார்த்து நகரில் உள்ள ஊருணிகள், கண்மாய்கள், குளங்கள் நல்ல முறையில் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மே மாதம் 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்னரே மே 1ஆம் தேதி மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யத் துவங்கியது. சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே மாதம் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நீர்நிலைகளில் மழை நீர் சேகரமாகத் துவங்கியது.
இந்நிலையில் புதன்கிழமை (மே 28) அக்னி நட்சத்திரம் நிறைவு நாளில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவைந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை நகரில் 40மிமீ, காரைக்குடி 8.2, திருப்புவனத்தில் 30.2, திருப்பத்தூரில் 14, இளையான்குடியில் 4 மிமீ மழை பதிவானது.
மே மாதம் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை காரைக்குடியில் 185.2மிமீ, மானாமதுரையில் 175 மிமீ, சிவகங்கையில் 211மிமீ, திருப்புவனத்தில் 274மிமீ, திருப்பத்தூரில் 135.8மிமீ, இளையான்குடியில் 160.4மிமீ, தேவகோட்டையில் 141.8மிமீ மழை பதிவாகி உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக 183.31மிமீ மழை பதிவாகி உள்ளது. கோடையில் கிடைத்த இந்த மழை மாவட்ட விவசாயிகளையும், பொது மக்களையும் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

