சுகாதாரமின்றி உணவு தயாரித்தல், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் தேக்கிவைத்திருத்தல், பிளாஸ்டிக் கழிவுகள் குவியல், குவியலாக இருப்பதை கண்டு மாணவிகள் முகம் சுளித்தனர். தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளிலும்மந்தநிலையே இருந்து வந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேட்டுடன் வசிக்க வேண்டியிருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும்மாணவிகள் தரப்பில் புகார் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி கோட்டாட்சியருக்கு ஆட்சியர்மு.கருணாகரன் உத்தரவிட்டார். இதையடுத்து கோட்டாட்சியர் பெர்மி வித்யா தலைமையில் வருவாய்த்துறையினர் சனிக்கிழமை இந்த விடுதியில் அதிரடிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விடுதியில் தனியாக காப்பளரோ, இரவுக் காவலாளியோ இல்லை என்பது தெரியவந்தது. மேலும், கழிப்பறைகள் மற்றும் இதரபகுதிகள் சுகதாரா சீர்கேடாக இருப்பதும் தெரியவந்தது. உணவுத் தயாரிப்பிலும் சுத்தமாக இருக்கவில்லை. இதற்காக தரச் சான்றும் பெறவில்லைஎன்பது தெரியவந்தது. இதையடுத்து, விடுதியில் இருந்த மாணவிகள் அனைவரையும்வெளியேற்றி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவன விடுதியில்பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது.