கங்கை நீர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த தினம்: சிறப்பு வழிபாடு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கங்கை நீர் வந்த தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனிதநீர் வழங்கப்பட்டது.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கங்கை நீர் வந்த தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனிதநீர் வழங்கப்பட்டது.
காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பறந்து விரிந்த இந்த தேசத்தில் நீருக்கும், பஞ்ச பூதங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கங்கை கங்கோத்ரியில் உற்பத்தியாகி நம்முடைய தேசம் முழுவதும் பரவி மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலப்பது நாம் அறிந்ததாகும். அப்படிப்பட்ட கங்கை ஐப்பசி (துலாம்) மாதம் காவேரியில் கலப்பதற்காக வடக்கிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு இன்று (01-11-2014) மஹாநவமி (கங்கை) நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூடம் என்று அழைக்கப்படுகிற தீர்த்த கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம். நடராஜர் கோயிலில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் கங்கை நீர் உள்ள பரமானந்த கூடம் என் தீர்த்த கிணறு சித்சபையின் சுற்றுப் பிரகாரத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
கங்கைநீர் பரமானந்த கூடத்தை வந்த தினத்தை முன்னிட்டு இன்று கங்கைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பூஜை செய்த புனித நீர் வழங்கப்பட்டது. பின்னர் கங்கைநீர் இங்கிருந்து புறப்பட்டு கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதரவெங்கடேச அய்யாவாள் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாகவும், அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹா மக குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இந்தியா முழுவதும் இது போன்ற இன்னும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளது அதில் இது சிறப்பாகும் என நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேசதீட்சிதர் தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...