ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

நவ.4-ல் சிதம்பரம் அருகே பி.முட்லூரில் சித்தர் கோயில் கும்பாபிஷேகம்! 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூரில் சித்தர் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற நவ.4-ம் தேதி காலை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் ஆதிமூலேஸ்வரம் என்ற பரங்கிப்பேட்டையில் நாராயணசாமி என்றும், அனுமான் சுவாமிகள் என்றும் அழைக்கப்படும் சித்தர் சுவாமிகள் சுமார் 15 ஆண்டுகள் தங்கியிருந்து மனித குலத்தையும், உயிரினங்களையும் மெய் ஞானப்பாதைக்கு கொண்டு சென்றவர்.

News image
Updated On :2 நவம்பர் 2014, 2:33 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூரில் சித்தர் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற நவ.4-ம் தேதி காலை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் ஆதிமூலேஸ்வரம் என்ற பரங்கிப்பேட்டையில் நாராயணசாமி என்றும், அனுமான் சுவாமிகள் என்றும் அழைக்கப்படும் சித்தர் சுவாமிகள் சுமார் 15 ஆண்டுகள் தங்கியிருந்து மனித குலத்தையும், உயிரினங்களையும் மெய் ஞானப்பாதைக்கு கொண்டு சென்றவர்.

இவரது திருவுருவ மெய்ஞான சிலையை பி.முட்லூரில் பிரதிஷ்டை செய்தும், பரங்கிப்பேட்டை கொத்தர் தெருவில் அவதரித்த சுவாமி ஓங்காரநந்தாவிற்கு அதே நன்னாளில் சிலை பிரத்திஷ்டை செய்தும் குடமுழக்கு நன்னீராட்டு விழா வருகிற நவ.4-ம் தேதி செவ்வாய்க்கிழமை பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூரில் நடைபெறுகிறது.

குடமுழக்கை முன்னிட்டு  நவ.3-ம் தேதி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெறுகிறது.

பின்னர் நவ.4-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.30 ணணிக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.பின்னர் தெய்வீக கருத்தரங்கம் சற்குரு சித்தர் சுவாமிகள் தலைமையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராசு முன்னிலையில் நடைபெறுகிறது. சுவாமி ஓங்காரநந்தா வரவேற்கிறார். கருத்தரங்கில் உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் திருமடம் ஸ்ரீசிவஞான தேசிக சுவாமிகள், சிதம்பரம் மெளன மடாலயம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள், தருமை ஆதீனம் முனைவர் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர்.

பின்னர் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் சுவாமி ஒங்காரநந்தாவின் கடவுளை காட்டும் கருணையாளர்கள் என்ற நூலை நீதியரசர் துரைசாமிராசு வெளியிடுகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் நூலை பெற்றுக்கொள்கிறார். சுவாமி கோடீஸ்வரானந்தா நன்றி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.