நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வழக்குளில் இருந்து ஜெயலலிதா விடுபட வேண்டி கோவை மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் பழனியில் மொட்டை

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறவேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி மன்றம் சார்பில் சூலூர் ஒன்றிய

News image
Updated On :5 நவம்பர் 2014, 12:24 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறவேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி மன்றம் சார்பில் சூலூர் ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சுமார் ஐம்பது பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்திரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படதால் அதிமுகவினர் தமிழகம் முழுக்க கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் தமிழக முதல்வராக அரியணை ஏறவேண்டி மீண்டும்  கோயில்களில் பிரார்த்தனைகள், மசூதி, சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளரும், சேர்மனுமான பாலசுந்தரம் தலைமையில் சுமார் 50 பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.  பழனி அடிவாரம் சரவணப்பொய்கையில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டையடித்து சரவணப்பொய்கையில் நீராடி மலைக்கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தமிழக மக்களின் முதல்வர் அம்மா பெயரில் சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடத்தினர்.  அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.