புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை :மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம்செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2014, 4:17 pm

முருகன்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த காங்கேயன்குளம் நடுத்தெருவைச்

சேர்ந்தவர் மாரியம்மாள் (30). மனநலன் பாதிக்கப்பட்ட இவர், தாய் பராமரிப்பில் வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சுப்பையா (எ) துரைப்பாண்டியன் (55), மாரியம்மாளை மிரட்டி அவ்வப்போது பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், மாரியம்மாள்

கருவுற்றதால் விசாரணை நடத்திய உறவினர்கள், சுப்பையாதான் காரணம் என்பதையறிந்தனர். இதுதொடர்பாக, அந்த பெண்ணின் சகோதரர் பரமசிவன், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் புகார் அளி்த்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி,  குற்றம் சுமத்தப்பட்ட சுப்பையா (எ) துரைப்பாண்டியனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.7 ஆயிரம்அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.