ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சேலம் - மேட்டூர் அணை இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து டிசம்பர் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.வி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் - மேட்டூர் அணை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பயணிகள் ரயில் போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதன்படி, ஈரோடு - மேட்டூர் அணை வரையிலான பயணிகள் ரயில்கள் (எண்கள் 56100 - 56101) ஈரோடு - சேலம் வரையில் மட்டுமே இயக்கப்படும்.
அதேநேரம் சேலம் - மேட்டூர் அணை இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்கள் (எண்கள் 56103 - 56102) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 21-ம் தேதி வரையிலும் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.