தொலைதூரக்கல்வி இயக்க 6 தமிழ் பிரிவு மாணவர்களுக்கு பணிநியமன ஆணை!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் தமிழ்ப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நேர்காணல் பல்கலைக்கழக டைட்டானிக் கட்டடத்தில் உள்ள


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் தமிழ் பிரிவில் பயின்ற 6 மாணவர்களுக்கு நேர்காணல் முகாமில் பணிநியமனை ஆணை பெற்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் தமிழ்ப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் நேர்காணல் பல்கலைக்கழக டைட்டானிக் கட்டடத்தில் உள்ள ஹைடெக் ஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில் பத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். இதில் பங்கேற்ற தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்ப்பிரிவு மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம், தொலைதூரக்கல்வி இயக்கக, இயக்குநர் ராம.சந்திரசேகரன், இந்திய மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்த்துறை தலைவர் ந.வெங்கடேசன், பேராசிரியர் முனைவர் சமுத்திரராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...