ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நலவாழ்வு மன்றம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நலவாழ்வு மன்றம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா முன்னிலை வகித்தார். நலவாழ்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.நலவாழ்வு மன்ற செயல்பாடுகள் குறித்து ஆசிரியைகள் ந.ரெங்கலதா, ச.பொன்மலர் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நலவாழ்வு மன்றம் செயல்படுவது பாராட்டுக்குரியது. இதன் மூலம் மாணவர்கள் தன் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை குறித்து அறிந்து வைத்துள்ளார்கள். பாரதப் பிரதமர் தூய்மையான இந்தியா திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தொடர்ந்து தங்களது சுற்றுப் புறத்தையும், கிராமத்தையும் தூய்மையாக வைத்திருந்து தொற்று நோய்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்த அவர், பல்வேறு முதலுதவி சிகிச்சைகளை செயல் விளக்கம் செய்து காட்டினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்விக்குழுத் தலைவி அ.கனியம்மாள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு நலவாழ்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியை ந.ரெங்கலதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com