எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சபரிமலை ஐயப்பன்கோயில் சீசனை முன்னிட்டு நவ.17 முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலையில் ஒருவழி போக்குவரத்து

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு, நவ.17-ம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்துக்கு சென்று வருவதற்கு ஒரு வழி பாதை

News image
Updated On :8 நவம்பர் 2014, 12:14 pm

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு, நவ.17-ம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்துக்கு சென்று வருவதற்கு ஒரு வழி பாதை போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

      தேனி மாவட்டம், குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கிலான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வருவது வழக்கம். சபரிமலைக்குச் சென்று வரும் வாகனங்கள் குமுளி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல நேரம் காத்திருப்பதை தவிர்பதற்கு, ஐயப்பன்கோயில் சீசனில் குமுளி, கம்பம்மெட்டு சாலையில் ஒரு வழி பாதையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

     இந்த ஆண்டு, சபரிமலை ஐயப்பன்கோயில் சீசன் கார்திகை முதல் தேதியில்(நவ.17) தொடங்குகிறது. நவ.17-ம் தேதி முதல், தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் குமுளி வழியாக செல்ல அனுமதிக்கப்படும். சபரிமலையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்ப வரும் வாகனங்கள் கம்பம்மெட்டு சாலை வழியாக வர வேண்டும். ஒரு வழிபாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பம் மற்றும் கம்பம்மெட்டு சாலையில் காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்படும்.

      வாகன அனுமதி சீட்டு: தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள், கூடலூர் அருகே லோயர்கேம்பில் செயல்பட்டு வந்த போக்குவரத்து சோதனைச் சாவடியில் தற்காலிக அனுமதிச் சீட்டு பெற்று வந்தனர். தற்போது இந்த சோதனைச் சாவடி, தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்குக் கழக பணி மனை அருகே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் கேரளத்துக்குச் சென்று வர தற்காலிக அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.