டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி மாநாட்டிற்கு பின் வாசன் பின் சென்றவர்கள் காங்கிரஸிற்கு திரும்புவார்கள்: திருநாவுக்கரசர்

திருச்சியில் ஜி.கே.வாசன் நடத்த உத்தேசித்துள்ள மாநாட்டிற்குப் பின்னர், அவர் பின் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருவுக்கரசர் கூறினார்.

News image
Updated On :9 நவம்பர் 2014, 7:59 am

கோ.ஜெயக்குமார்

திருச்சியில் ஜி.கே.வாசன் நடத்த உத்தேசித்துள்ள மாநாட்டிற்குப் பின்னர், அவர் பின் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருவுக்கரசர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவர், ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்றதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 10 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை தேசிய அளவிலான கட்சிப் பதவிகள், மந்திரி பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, கட்சி ஆட்சியில் இல்லை என்பதற்காக தலைமை மீது குறை கூறுவது அபத்தமானது.
ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓராண்டு இருந்தார்.

அப்போது கொடுக்கப்பட்ட உறுப்பினர் அட்டையிலும் காமராஜர், மூப்பனார் படங்கள் இல்லையே. தற்போது கட்சியை விட்டு வெளியேறுவதற்கு இதனை அவர் காரணமாக கூறுவது ஏற்புடையது இல்லை. மூப்பனார் கட்சியை விட்டுச் சென்றபோது, காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தார் தலைமை வகிக்கவில்லை. தற்போது சோனியா காந்தி தலைவராக உள்ளார்.

இந்த சூழ்நிலையில் வாசன் கட்சியை விட்டு வெளியேறியுள்ளது கண்டனத்திற்குரியது. கட்சி ஆட்சியில் இல்லை என்ற காரணத்திற்காக கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, பொறுப்பற்ற காரணங்களை வாசன் சொல்லி மழுப்பி வருகிறார். வாசன் பின் செல்வோர், அவர் திருச்சியில் நடத்தும் மாநாட்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கே திரும்புவார்கள் என்றார் திருநாவுக்கரசர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.