இலங்கை பிரச்னையில் காங்கிரஸ், பாஜக இரண்டின் அணுகுமுறையும ஒன்றே என்பது தவறு. பாஜக ராஜ்ஜிய ரீதியாக இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ராஜபட்சேவின் அணுகுமுறை தவறு என்பதை நாங்களே ஒப்புக்கொள்கிறோம். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாரதீய ஜனதா கட்சி உருவெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மக்கள் பிரச்னையை விட சொத்துப் பிரச்னை, அலுவலகத்தை யார் கைப்பற்றுவது, யார் படத்து அகற்றுவது என்ற பிரச்னையையே அதிகமாக சந்தித்து வருகின்றனர். தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது. அதனால்தான் கமலாலயம் நோக்கி தினமும் இலட்சக்கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும் சாரை, சாரையாக படையெடுத்து வருகின்றனர்.