சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
தங்கச்சி மடத்தை சேர்ந்த ஐந்து அப்பாவி மீனவர்கள் குறித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பேசியதைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாக


தங்கச்சி மடத்தை சேர்ந்த ஐந்து அப்பாவி மீனவர்கள் குறித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பேசியதைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாக ஆளும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத சுப்பிரமணியன்சுவாமி தனது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளது எப்படி என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அப்பாவிகள். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் தங்கச்சி மடத்து மீனவர்கள் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களிடையேயும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வேலைக்கு கூட செல்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசே இவர்களை விடுவிப்பதற்கு சொந்த செலவை செய்து வருகிறது. இந்தச்சூழ்நிலையில் இலங்கை அதிபருடன் பிரதமர் பேசியிருந்தால் வரவேற்புக்குரியது. ஆனால் அதை ஏன் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. வெளிவிவகாரத்துறை தொடர்பாளர் ஏன் அறிவிக்கவில்லை. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக பேசி வருபவர். தமிழர்கள் நலனுக்கு குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசுபவர்.
தமிழக முழுக்க மீனவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவர் தெரிவித்த தகவல் போராட்டங்களை மழுங்கடிக்க செய்யும் செயலாக உள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகாரத்துறை நிர்வாகம் பாரத பிரதமர் பேசியது உண்மையாக இருந்தால் அவர் என்ன பேசியுள்ளார் என்ற விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற நிலையில் நான் கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு மேல்முறையீட்டுக்காக வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. அது எத்தனை மாதம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் சிறையில் வாடும் மீனவர்கள் மூன்று வருடங்களை சிறையில் கழித்துள்ளனர். மேலும், அவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் அவர்களை யார் என்றே தெரியாது, இவர்களிடம் நாங்கள் போதைப் பொருட்கள் வாங்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதை அறிந்த பின்னரே தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
எப்படி இத்தாலி நாட்டு கடற்படையினரை மீட்க இத்தாலி அரசு இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தது அதே போல, இந்தியா தமிழக மீனவர்களை மீட்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், விரைவில் சட்டமன்றத்தை கூட்டி இலங்கை மீனவர்கள் நலன்குறித்து தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...