புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தண்ணீர் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தண்ணீர் கேட்டு  பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால்

News image
Updated On :12 நவம்பர் 2014, 10:31 am

முருகன்

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தண்ணீர் கேட்டு  பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 36ஆவது வார்டில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு கடந்த சில நாள்களாக தண்ணீர் வரவில்லை. இதுதொடர்பாக, மாநகராட்சியின் மண்டல அலுவலகத்திலும், பிரதான அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை
எடுக்கவில்லையாம். புதன்கிழமையும் இந்த பகுதிக்கு தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த பொதும்ககள் தண்ணீர் குடங்களுடன் மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயலர் ரம்ஜான் தலைமையில், காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் திறந்துவிட
நடவடிக்கை எடுப்பதாகவும், என்ன காரணத்துக்காக விநியோகித்தில் தடை ஏற்பட்டதை அறிந்து அவற்றை வருங்காலங்களில் நிகழாமல் சரிசெய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.