நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே வாலிபர் மரணத்தில் சந்தேகம்.  உறவினர்கள் சாலை மறியல்

  பழனி அருகே விருப்பாட்சியில் வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில்

News image
Updated On :14 நவம்பர் 2014, 3:25 pm

என்.​ அங்​கு​பாபு

  பழனி அருகே விருப்பாட்சியில் வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து அவரது சடலமும் ஒட்டன்சத்திரத்தில் மருத்துவமனையில் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

    பழனி ராஜாஜி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம்(48).  இவரது மகன் முத்துக்குமார்(23).  இவர் எம்எஸ்ஸி., படித்து விட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்ட்வின் கல்லூரியில் பி.எட்., பயின்று வருகிறார்.  இவருக்கும் பழனியை அடுத்த விருப்பாட்சி தலையூத்தை சேர்ந்த மகுடீஸ்வரன் மகள் புவனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் முத்துக்குமார் வியாழக்கிழமை புவனாவுக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர் சுரேஷூடன் புவனா வீட்டுக்கு சென்றுள்ளார்.  இரவு நீண்ட நேரமாகியும் முத்துக்குமார் வீடு திரும்பாததால் சுரேஷூக்கு முத்துக்குமாரின் தாயார் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது தான் முத்துக்குமாரை புவனா வீட்டில் விட்டுவிட்டு உடனே வந்து விட்டதாக கூறியவர் நீங்களும், முத்துக்குமார் தந்தையும் தனியாக விருப்பாட்சியில் உள்ள புவனா வீட்டுக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.  அவரது பேச்சில் சந்தேகமடைந்த முத்துக்குமாரின் பெற்றோர்கள், மற்றொரு மகனுடன் சம்பவ இடத்துக்கு சென்றபோது  புவனாவின்  வீட்டெதிரே இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து தீயணைப்புப்படையினர் சடலம் ஒன்றை மீட்டதும், அது முத்துக்குமாரின் உடல் என்றும் தெரியவந்தது.  

சுரேஷின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும், ஆடைகள் கிழிந்தும் இருந்ததை பார்த்த பரமசிவம் தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், புவனாவின் தாயார் சந்திரா, தந்தை மகுடீஸ்வரன், சுரேஷ் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும் என்றும் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தார்.  இந்நிலையில் மீட்கப்பட்ட முத்துக்குமாரின் சடலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.  பிரேத பரிசோதனை முடிந்த பின் முத்துக்குமாரின் சடலத்தை பெற்றோரும், உறவினர்களும் பெற மறுத்து விட்டனர்.

மேலும் அவர்கள் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  நேரமாக, நேரமாக உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் என ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒட்டன்சத்திரம் பைபாஸ் வழியாக மாற்றிவிடப்பட்டது.  மறியல் நடந்த இடத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.  பழனி டிஎஸ்பி., சண்முகசுந்தரம், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி., ஜானகிராமன் ஆகியோர் முத்துக்குமார் பெற்றோர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஜான்சன் கிறிஸ்டோபர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  எனினும் மறியல் கைவிட மறுத்து விட்டனர்.

 இதனால் பலமணி நேரம் ஒட்டன்சத்திரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் மறியிலில் ஈடுபட்ட முத்துக்குமாரின் உறவினரான தாராபுரத்தை சேர்ந்த கதிரேசன்(45) என்பவர் மாரடைப்பால் இறந்து போனார்.  இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டது.  முத்துக்குமாரின் பெற்றோர்கள் சடலத்தை வாங்க மறுத்து சென்றுவிட்ட நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் முத்துக்குமார், கதிரேசன் ஆகியோர் சடலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.