புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.31 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சிதம்பரம் அருகே கீழ்புவனகிரி டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து ரூ.31 ஆயிரம் ரொக்கம், ரூ.9800 மதிப்புள்ள பாட்டில்களை திருடிச்சென்றனர்.

News image
Updated On :14 நவம்பர் 2014, 6:59 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கீழ்புவனகிரி டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து ரூ.31 ஆயிரம் ரொக்கம், ரூ.9800 மதிப்புள்ள பாட்டில்களை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே கீழ்புவனகிரியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செழியன், விற்பனையாளராக சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் பணியாற்றுகின்றனர். மேற்கண்ட இருவரும் வியாழக்கிழமை இரவு கடையை பூட்டுக்கொண்டு வீடு திரும்பினர். வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்கச் சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணப்பெட்டியில் இருந்த ரூ.31 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.9800 மதிப்புள்ள 2 பெட்டிகளில் இருந்த 98 மதுப்பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.