வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீர்பிடிப்பு பகுதியில் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு, மணிமுத்தாறு அணை மூடல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2014, 5:46 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 60, பாபநாசம் கீழ் அணை 23, சேர்வலாறு அணை 19, மணிமுத்தாறு அணை 27.2, கருப்பாநதி அணை 8, குண்டாறு அணை 3.1, கொடுமுடியாறு அணை 15, பேச்சிப்பாறை அணை 59, பெருஞ்சாணி அணை 2.

பரவலாக மழை: திருநெல்வேலியில் 13 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 16 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 10 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 32 மி.மீ மழையும், செங்கோட்டையில் 1.2 மி.மீ மழையும், தென்காசியில் 3.2 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 5.2 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 1.2 மி.மீ மழையும், நான்குனேரியில் 1 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 26 மி.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 246 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

அணைகளின் நீர்மட்டம் விவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.10 அடி உயர்ந்து 112.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 124.29 அடியாகவும் இருந்தது. பிற அணைகள்: மணிமுத்தாறு அணை 80.40, கடனாநதி அணை 74.40, ராமநதி அணை 81.50, கருப்பாநதி அணை 67.42, குண்டாறு அணை 36.10, அடவிநயினார் அணை 106.75, வடக்குப் பச்சையாறு அணை 22.00, நம்பியாறு அணை 14.00, கொடுமுடியாறு அணை 34.75 அடியாகவும் இருந்தது. விடிய விடிய மழை: வியாழக்கிழமை இரவு இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமை பகலிலும் மிதமான மழை பெய்தது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்ததால் வெள்ளிக்கிழமை மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.