சேலம் அழகாபுரம் சம்பந்தன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் காகித வியாபாரம் செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் ஷீரடி கோயில் சென்றிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.
பாண்டியன் ஷீரடி சென்று விட்டு வீடு திரும்பியதும் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் குமாரசாமிபட்டியில் மருத்துவர் ஒருவரது வீட்டிலும் இதுபோன்றத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 22 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


