டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேரூராட்சி, நகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்திற்காக அரசு

News image
Updated On :16 நவம்பர் 2014, 8:17 am

கோ.ஜெயக்குமார்

தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்திற்காக அரசு வழங்கும் நிதியை, திட்டப் பணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்வதால், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்:

தமிழக அரசு, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களின் ஊதியத்திற்கான மானியத்தை பொது நிதி மூலமாக வழங்கி வருகிறது. இந்த நிதியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் எதிர்பார்ப்புடன் தெரு விளக்குகள், மின்சாதனப் பொருட்கள், பொது சுகாதாரப் பொருட்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதியிலிருந்து வாங்கப்படும், தரமற்ற பொருட்களை தேவையில்லாமல் இருப்பு வைப்பதால் இந்த நிதி முடங்கிப்போகிறது. இதனால் இத் துறைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அருப்புக்கோட்டைப் பகுதியில் இப் பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுகிறது. அரசு வழங்கும் மானியத்தை மின் கட்டணம் செலுத்துவதற்கும், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை தவறாகப் பயன்படுத்தும் பேரூராட்சி மற்றும் நகராட்சி தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், ஆணையாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டல அலுவலகம்: விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளுக்கான, மதுரை மண்டல உதவி இயக்குநர் அலுவலர் அலுவலகம் மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதிய இட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. அரசு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் இக் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கித் தந்து , ரூ.50 லட்சம் கட்டடம் கட்ட நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக காமராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.