டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து மோதி இளைஞர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2014, 3:31 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகர்-சத்யாநகரைச் சேர்ந்தவர் முத்தையா மகன் ராஜா (27). இவரும் இதே இடத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவபவரும் இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே மோட்டார் சைக்கிள் மீது, எதிர் திசையில் திருப்பூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உடல் நசுங்கி உயிரிழந்தார்.

முத்துராஜ் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.