ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டும் இடத்தில் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு!

கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 நவம்பர் 2014, 3:43 pm

ஜி.சுந்தரராஜன்

கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கப்படும் மேகேதாட்டுப் பகுதியில் 48 டிஎம்சி கொள்ளவு கொண்ட இரு அணைகள் காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உச்சநீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத் துச்சமாகத் தூக்கியெறிந்துள்ளது.

இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும். அதன் பிறகு தமிழ்நாட்டில் 24 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன், காவிரியால் குடிநீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பல கோடி மக்கள் குடிநீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள்.

எனவே காவிரி உரிமை மீட்புக்குழுவில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆயிரம் பேரை ஒக்கேனக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல் போராட்டம் நடத்தி. மக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து 22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நடத்தவுள்ள முழு அடைப்பு, பொது வேலை நிறுத்தம், ரயில் மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமை மீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டு அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதிய அணைகள் கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, வனத்துறையினரும், மத்தியஅரசின் நீர்ப்பாசனத்துறையினரும், அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து அழுத்தம் தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது என பெ.மணியரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.