பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே 2.67 லட்சம் பணம் திருட்டு

கிருஷ்ணாபுரம், கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து மகன் கருப்பசாமி(44). இவர் கிருஷ்ணாபுரத்தில் இருசக்கர வாகன விற்பனையகம் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை

News image
Updated On :19 நவம்பர் 2014, 10:10 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ரூ. 2.67 லட்சத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணாபுரம், கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து மகன் கருப்பசாமி(44). இவர் கிருஷ்ணாபுரத்தில் இருசக்கர வாகன விற்பனையகம் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தாராம். பின்னர் பணப்பையை வீட்டிலுள்ள மேஜை மீது வைத்து விட்டு கதவைப் பூட்டாமலேயே தூங்கி விட்டாராம். நள்ளிரவு கண் விழித்துப் பார்த்த பொழுது பணப்பையைக் காணவில்லையாம். அதில் ரூ. 2,67,000 பணம் இருந்ததாம். இது தொடர்பான புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.