ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரம் அருகே பறக்க முடியாமல் கிடந்த அரியவகை ஆந்தை மீட்பு!

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தில் வெளிநாட்டு பறவை ஒன்று பறக்க முடியாமல் இருப்பதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார்

News image
Updated On :20 நவம்பர் 2014, 11:59 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பறக்க முடியாமல் கிடந்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை மீட்டு வனத்துறையினர் காப்புக்காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தில் வெளிநாட்டு பறவை ஒன்று பறக்க முடியாமல் இருப்பதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் பணியாளர்கள் அக்கிராமத்திற்கு சென்று, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்லத்துரை வீட்டு தோட்டத்தில் காலில் நூல் சிக்கி  பறக்க முடியாமல் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆந்தையை மீட்டு அருகே உள்ள பிச்சாவரம் காப்புக்காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.