திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் மணல் லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). இவருக்குச் சொந்தமான மினிலாரியில் தாழையூத்து காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக போலீஸார் வழக்குப்பதிந்து, கடந்த 24-9-2014 இல் பறிமுதல் செய்தனராம். அதன்பின்பு திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3 இல் ஆணை பெற்று பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மீட்க தாழையூத்து காவல் நிலையத்துக்கு முருகன் சென்றாராம். அப்போது தாழையூத்து காவல் நிலைய ஆய்வாளர் சோனமுத்து (44), லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு முருகன் தகவல் கொடுத்தார்.
போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தை முருகன், காவல் ஆய்வாளர் சோனமுத்துவிடம் வியாழக்கிழமை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு உதவி கண்காணிப்பாளர் பர்குனம், ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் சோனமுத்துவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


