பொதுமக்கள் வழக்குகள் குறித்த தகவல்களை ஒரே இடத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை சேவை மையத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம்-1,ஜே.எம்-2, விரைவு நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அலைந்து வருகின்றனர். தற்போது, நீதிமன்றங்களில் நடத்தப்பட்டு வரும் வழக்குகள் குறித்த விவரங்கள் அனைத்தும் கணினிமைய மாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் நீதித்துறை சேவை மைய கணிப்பொறிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை நீதிமன்ற வளாக கீழ்தளத்தில் மாவட்ட நீதிபதி தாரணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் பொதுமக்கள் வழக்கு விவரங்களை நீதித்துறை சேவை மையத்தை அணுகி அறிந்து கொள்ளலாம். மேலும், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும் நாள், வழக்குரைஞர் விவரம் உள்ளிட்டவைகளையும் ஒரு இடத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் இச்சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

