திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் தன்னிச்சையாக செயல்படும் ஒன்றியக் குழு தலைவரை கண்டித்து 5 அதிமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் அளித்த ராஜிநாமா மனுவை முக்கிய நிர்வாகிகள் சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து சனிக்கிழமை திரும்ப வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியபட்டியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஒன்றியக் கவுன்சிலர்கள் பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு ஒன்றியக் குழுதலைவர் இந்திரா மோகன் தலைமை வகித்துள்ளார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜூபொன்னு முன்னிலை வகித்துள்ளார். இதில், ஒரு சில வார்டுகளில் உறுப்பினர்களை கலந்து ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக பணிகளை தேர்வு செய்வதாக கூட்டத்தில் வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவி்ததார்களாம்.
அதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3-வார்டு மு.கந்தசாமி, 6-வார்டு ம.நடராஜன், 15-வது வார்டு மு.ஜெயலட்சுமி, 13-வது வார்டு ஆ.ராமு, 14-வது வார்டு ப.போத்திராஜ் ஆகிய வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததாக கூறி ஒன்றியக் குழு தலைவர் இந்திரா மோகனிடம் ராஜிநாமா கடிதங்களை அளித்து வெளிநடப்பு செய்தார்களாம்.
இதையடுத்து, கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த பிரமுகர்கள் ஆகியோர் வட்டார ஊராட்சி உறுப்பினர்களை சமதானம் செய்தனர். அதையடுத்து, ராஜிநாமா செய்தவர்கள் மனுக்களை திரும்ப வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


