விருதுநகர் மாவட்டத்தில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வுக்கு இதுவரையில் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவ-10ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் 5500 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பம் செய்வதற்கு ஒரு நாளே உள்ளதால் செவ்வாய்கிழமை காலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்கள் 500 பேருக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதனால், அவர்கள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்று, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து உடனே கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பபடிவங்களை 26-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அளிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! லாபத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள்!!

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

