தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெல்லை மாநகர 4 பகுதிகளுக்கு திமுக-வில் வேட்புமனுத் தாக்கல்

திமுக-வில் உள்கட்சி தேர்தல் அனைத்து நிலைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.மாநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி

Updated On :29 நவம்பர் 2014, 9:57 am

திமுக-வின் 14ஆவது அமைப்புத் தேர்தலின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகரில் உள்ள 4 பகுதி கழகங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக-வில் உள்கட்சி தேர்தல் அனைத்து நிலைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.மாநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி எல்லைக்குள்பட்ட மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தச்சநல்லூர் ஆகிய 4 பகுதி கழகங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கைலாசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு அவைத் தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் 3துணைச் செயலர்கள்,  5 பிரதிநிதிகள் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 4 பகுதி கழகங்களுக்கு 44 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த 44 பதவிகளுக்கும் போட்டியிட விருப்பமுள்ள கட்சி உறுப்பினர்களிடம் இருந்து இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.தலைமைக் கழகத்தில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சதாசிவம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் வேட்பு மனுக்களைப் பெற்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மனுத்தாக்கல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.