/

திருக்கோவிலூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்: கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரியும்,

News image
Updated On :1 அக்டோபர் 2014, 10:18 am

ச.​ கார்த்​தி​கே​யன்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும், சிறையில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரியும், திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் பொம்மையை எரித்து வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஆர்ப்பாட்டத்துக்கு சேஷ.லட்சுமிகுமார் தலைமை வகித்தார். அரசு வழக்குரைஞர் எஸ்.ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார்.

 ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் ஜெ.வேல்முருகன், பி.தீர்த்தமலை, எஸ்.மூர்த்தி, பா.ஸ்டாலின்குமார், பா.பிரசன்னா, சி.பாலகிருஷ்ணன், பி.அயோத்தி, ஜி.கார்த்திகேயன், மகேஷ், சுரேஷ்குமார், ரமேஷ், எம்.ராஜேந்திரன், எம்.பாண்டு, ஆர்.ஆனந்த், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.