ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே  சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி: பெண் தீக்குளிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்த 23 வயது பெண் வெள்ளிக்கிழமை

Updated On :3 அக்டோபர் 2014, 1:58 pm

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்த 23 வயது பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிலிருந்தே வருத்தத்துடனும், கடுமையான மன வேதனையுடனும் இருந்து வந்தாராம்.

   இதனால், மேலும் மனம் உடைந்த சித்ராதேவி கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.

    இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது தொடர்பாக நரிக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.