நேற்று சென்னையில் காலமான தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் உடல் அவரது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் நாச்சிமுத்துக் கவுண்டர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்களின் அஞ்சலிக்கு வைத்தபின்னர், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அரசியல் சமூக பிரபலங்கள், அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என ஏராளமானவர்கள் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை 6 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.