அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி: சிதம்பரம் ஸ்ரீபிரம்மராயர் கோயிலில் மகாசண்டி யாகம்!

சிதம்பரத்தில் உள்ள சித்தர்பீடமான ஸ்ரீபிரம்மராயர் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மகாசண்டி யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் 36 பேர்

News image
Updated On :6 அக்டோபர் 2014, 12:21 pm

ஜி.சுந்தரராஜன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் ஸ்ரீபிரம்மராயர் கோயிலில் தமிழக வணிகவரி அமைச்சர் எம்.சி.சம்பத் ஏற்பாட்டின் பேரில் மகாசண்டி யாகம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள சித்தர்பீடமான ஸ்ரீபிரம்மராயர் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மகாசண்டி யாகம் நடத்தப்பட்டது. ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் 36 பேர் பங்கேற்று 3 அடி உயரத்திலான யாககுண்டத்தில் யாகத்தை நடத்தினர். 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1768 வகை மூலிகைகள், பட்டைகள், நெய், மஞ்சள், மலர்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு தொடங்கிய மாலை 4 மணிக்கு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஏ.அருண்மொழிதேவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வி ராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.