டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை

News image
Updated On :7 அக்டோபர் 2014, 1:25 pm

கோ.ஜெயக்குமார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.

நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.