வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.35 லட்சம் தப்பியது: ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. பணத்தை எடுக்க முடியாததால் அதிலிருந்த ரூ.35 லட்சம் தப்பியது. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.









