அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On :17 அக்டோபர் 2014, 11:02 am

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன், பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரது மகனும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.