பழனியில் தொடர்மழை: வேகமாக நிரம்பும் குளங்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்த நிலையில் குடிநீருக்கே பெரும் திண்டாட்டம் இருந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது சாரல்மழை பெய்து


பழனி அருகே கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளங்கள் நிரம்பி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்த நிலையில் குடிநீருக்கே பெரும் திண்டாட்டம் இருந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அவ்வப்போது சாரல்மழை பெய்து வருகிறது. தவிர, பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பழனியை சுற்றியுள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மலைத்தொடர்களில் சிறியதும், பெரியதுமான ஏராளமான நீர்வீழ்ச்சிகள் தோன்றி கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் வரதமாநதி அணைக்கட்டு உள்ளது.
இது திண்டுக்கல் மாவட்டத்தின் சிறிய அணை ஆகும். இந்த அணையால் கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், பழனி, எரமநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த சுமார் 5200 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கொடைக்கானல் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பெய்து வரும் சாரல் மழையால் பழனி அருகே உள்ள இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 150கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரம் 67.47 அடியாகும். தற்போது சுமார் 60அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.பழனிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு பொருந்தலாறு அணை ஆகும். மாவட்டத்தின் பெரிய அணையான இதன் மொத்த உயரம் 65 அடி. தற்போது 40 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 300 கனஅடி நீர் வரத்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 2 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பழனியை அடுத்த குதிரையாறு அணைக்கு வினாடிக்கு 260 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் தற்போது சுமார் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் வெளியேற்றம் ஏதும் இல்லை. தொடர்மழை காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமையும் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...