பழனி மலைக்கோயிலில் குரங்குகள் பிடிக்கும் பணி துவக்கம்
பழனி மலைக்கோயிலில் பக்தர்களைக் கவரும் அம்சங்களில் விலங்குகளில் குரங்கும், பறவையினத்தில் மயிலும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. ஓடும் குரங்கும், ஆடும் மயிலும் பக்தர்களை கவரும் அதே வேளையில்


பழனி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அவ்வப்போது இடையூறு செய்த குரங்குகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.
பழனி மலைக்கோயிலில் பக்தர்களைக் கவரும் அம்சங்களில் விலங்குகளில் குரங்கும், பறவையினத்தில் மயிலும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது. ஓடும் குரங்கும், ஆடும் மயிலும் பக்தர்களை கவரும் அதே வேளையில் குரங்குகளால் பக்தர்களுக்கு அவ்வப்போது இடையூறும் ஏற்பட்டு வருகிறது. அஜாக்கிரதையாக இருக்கும் பக்தர்களிடம் பால்புட்டி, பூக்கூடை, மணிபர்ஸ் உள்ளிட்ட பலவற்றையும் அவை பிடுங்கி சென்றுவிடுகின்றது. சிலசமயங்களில் பக்தர்களின் மருந்துகள் கூட பறிபோவதால் பக்தர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
பழனி மலைக்கோயிலில் இருந்த ஏராளமான குரங்குகள் கடந்த சிலமாதம் முன்பு பிடிக்கப்பட்டு வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் அப்போது சிக்காமல் தப்பிய குரங்குகள் தற்போது குட்டிபோட்டு பெருகிவிட்ட நிலையில் இவற்றை பிடிக்க வனத்துறை உதவியை திருக்கோயில் நிர்வாகம் நாடியுள்ளது. இதன்படி சனிக்கிழமை முதல் பழனி மலைக்கோயிலில் குரங்குகளை பிடிக்கும் பணியை வனத்துறை நிர்வாகம் துவக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த தனபால் என்பவர் கடலை, பொறி, பிரட், வாழைப்பழம் போன்ற குரங்குகளுக்கு பிடித்த உணவுப்பொருட்களை வைத்து இப்பணியை மேற்கொண்டு வருகிறார். சனிக்கிழமை மழை பெய்ததால் சுமார் ஆறு குரங்குகள் மட்டுமே பிடிபட்டுள்ளது. வரும் நாட்களில் பிற குரங்குகள் பிடிக்கப்பட்டவுடன் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை பிடிப்பதற்கான கட்டணத்தை திருக்கோயில் நிர்வாகம் செலுத்திவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...