ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான் கறியுடன் மூவர் கைது
தீபாவளி பண்டிகையொட்டி, மேற்குத் தொடர்ச்சி மலை காப்புக் காட்டில் வனப் பாதுகாப்புப் படை சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 7 பேர் கொண்ட அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான் கறியுடன் மூவரை வனப் பாதுகாப்புப் படையினர் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.
தீபாவளி பண்டிகையொட்டி, மேற்குத் தொடர்ச்சி மலை காப்புக் காட்டில் வனப் பாதுகாப்புப் படை சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையில் 7 பேர் கொண்ட அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காப்புக் காட்டில் மான் வேட்டையாடப்பட்டு அதன் இறைச்சி குறிப்பிட்ட ஒரு வீட்டில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் திங்கள்கிழமை கூமாப்பட்டி அருகேயுள்ள கிழவன்கோவில், சின்னத்தேவர் மகன் வனராஜ் (49) என்பவரது வீட்டில் அதிரடிப் படையினர் சோதனை செய்தபோது, அங்கு சமைக்கப்படாத மூன்று கிலோ மான் கறி இருந்துள்ளது. இதனைப் பறிமுதல் செய்து வனராஜையும் கைது செய்து வனத்துறையில் சார்பு ஆய்வாளர் சண்முகம் ஒப்படைத்தார்.
வனத்துறையினர் வனராஜூடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, இதே இடத்தைச் சேர்ந்த ரா.செல்லப்பபாண்டி (28), சே.மதன் 25) ஆகியோர் சேர்ந்து மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. வனத்துறையினர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...